துரோகங்களின் தாண்டவம்

துரோகங்களே தேக வியாதியாய் பற்றிக் கொள்ள மனிதர்களின் மனதில் துரோகங்களின் தாண்டவம்..
ஒவ்வொரு மனிதரிடத்தும் ஒவ்வொரு பரிமாணமாய் நாம் காணலாம் துரோகத்தின் அத்தியாயம்..

கற்புநெறி தவறாத கன்னியே தனக்கு வாழ்க்கை துணையாக வரவேண்டுமென்று எண்ணங்கொண்ட ஒவ்வொரு ஆடவரும் கற்புநெறி தவறாதவரா?

கற்புநெறியென்பது மனதால் கூட சலபப்படாத நிலையாயிருக்க,
கலை ரசனையோடு சபலமும் குடிகொண்ட மனம் கற்புநெறி உடையதாமோ?

விளையாட்டுக்கு இந்த உடலைத் துறந்து மீண்டும் இந்த உடலைப் புகுதலாகுமோ??

எதிர்பார்ப்போடு அன்பு கொண்டால் அது அன்புக்குச் செய்யும் துரோகம்..
தலை காணும் வரை புகழ்ந்துவிட்டு, ஏக நட்பு வசனம் பேசிவிட்டு, தலைமறைந்தபின் தூற்றினால் அது நட்புக்குச் செய்யும் துரோகம்..

தன் நட்பு தனக்குத் துரோகம் செய்ததாகக் கூறி தன் நட்புக்கு துரோகம் செய்பவர்களே இங்கு அதிகம்..
அன்போடு ஒற்றுமையாக வாழ தலைப்படுவதில்லை..

ஒவ்வொருடைய வாழ்வும் இங்கு துரோக சரித்திரமே...
அதனாலே மனதில் குடியேறிவிட்டது தரித்திரமே...

துரோகமழித்து துரோகமெண்ணாத தூய உள்ளத்தோடு வாழும் மனிதனே இந்த உலகில் எவராலும் ஈடுசெய்ய இயலாத உத்தம நிலையடைந்து சிறந்தவனாய் உயர்ந்து நிற்கிறான் பரவெளியாய்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (5-Aug-17, 9:53 pm)
பார்வை : 6603

மேலே