தண்ணீர் தேசம்

மேகத்தின்
மழைக்கருவை
பூமித்தாய் தன் வயிற்றில்
சுமந்து பெற்றெடுத்த மழலை
தண்ணீர்

தண்ணீரை
தன் நீராய் நினைத்து
சேமித்தால்
கண்ணீர் ஏது பூமியில் ?

குடி நீரை வாங்கி
டாஸ்மார்க்கில் சேமிப்போர்
குடிநீரைச் சேமித்து
பாஸ்மார்க் வாங்க முயல்வதில்லை

வழியில்லை ஏழை மக்களுக்கு
கஞ்சி தண்ணிக்கு
வழியை சீடுத்துகின்றான்
விரைவில் கொண்டுசெல்ல
கஞ்சா தண்ணிக்கு


நீர் எல்லாம்
சொத்தையும் முத்தையும்
சேமிப்பதைப்போல்
நீர் எனும் வித்தை சேமித்தால்
கர்நாடகா காட்டுமா வித்தை

விவசாயத் திடலின் மோகம்
தீர்க்கவேண்டிய ஆறுகள்
மனித உடலின் சோகம்
தீர்க்கவேண்டிய நதிகள்
புனிதக் கடலின் சோகம்
தீர்த்துக்கொண்டிருக்கின்றன
சங்கமமாய்

தண்ணீர் பூமித்தாயின் கரு
அதற்கு உரு தாராவிடினும்
எருவாக்காதீர்

ஆட்சியினை உடைத்து
கூட்டணியை உருவாக்க முயல்வோர்
ஆறுகளை உடைத்து
அவைகளுக்குள் கூட்டணியை உருவாக்கினால்
சமுத்திரம் பயனடையாது
நம் சமுதாயமல்லவா பயனடையும்

கோடையில்
மூன்று ஆறு பிரச்னை
மக்களுக்கு
மூணாரா ஊட்டியா
என்ற பிரச்சினை அவனுக்கு
மூணாறு போனாலும்
மூனை மட்டும் ரசிக்கின்றான்
ஆறுகளை ஏனோ மறக்கின்றான்

ஆறு குட்டைகளை
காக்கவேண்டும்
நம்மிடம் அழைத்துவரவேண்டும்
- அழைத்து வந்ததைப்போல்

ரோட்டைப் போட்டு
பெறவேண்டிய ஓட்டை
நோட்டைப் போட்டு
மூலையில் ஓட்டைப் போட்டு
பெறுகின்றான்
அதனால் மக்களுக்கு
பட்டை நாமம்
தருகின்றான்

இங்கே மக்களாய்ப் பார்க்காமல்
வாக்காளர்களாய்ப் பார்க்கின்றான்
எனவே
திட்டங்கள் தீட்டத்தான் செய்கின்றான்
நாடு நலம்பெற அல்ல
தன் வீடு நலம்பெற

குளம் வெட்டு
அதில் நீர் நிரப்பு
நிலவு வந்து இரவில் குளிக்கும்
பகலவன் வந்து பகலில் குடிக்கும்

கழிவு நீரை சுத்திகரி
கழி மரங்களைச் சுற்றி வை
நேரத்தை அதுவரை ஒத்தி வை

எரிகளெல்லாம்
தூர்வாரப்பட்டுதான் இருக்கின்றது
இனி தூர்வாரப்படவேண்டியது
அரசியல்வாதிகளின் ஊரைத்தான் .

தண்ணீரை நிறைப்போம்
எதிர்காலத்தில்
கண்ணீரைக் குறைப்போம் ..

எழுதியவர் : குமார் (5-Aug-17, 10:45 pm)
Tanglish : thanneer
பார்வை : 273

மேலே