உயிர் நண்பன்

நாம்
செய்யும் தவறுகள்
அனைத்தையும்
தவறாமல்
மன்னிப்பவன்

நாம்
நலமுடன் வாழ
அக்கறையுடன்
என்றும்
சிந்திப்பவன்

நம்
தாய்க்கு அடுத்து
அளவு கடந்து
அன்பை கொடுத்து
நேசிப்பவன்

நம்
உடல் தளர்ந்து
முதுமை கண்டும்
நம் பெயரை
வாசிப்பவன்

நட்பு என்ற
நறுமணத்தையே
உயிர்
மூச்சி வரை
சுவாசிப்பவன்

என்றென்றும்
நம் நினைவில்
வாழும்
நம் உயிர்
நண்பன் !

எழுதியவர் : சூரியன்வேதா (5-Aug-17, 11:07 pm)
Tanglish : uyir nanban
பார்வை : 494

மேலே