நண்பனுக்கு வாழ்த்துக்கள்
'நண்பன்', 'நட்பு.
என்ற சொற்களுக்கு
இலக்கணம் தந்தான்
இறைவனே ,அவன்
கண்ணனாய் அவதரித்தபோது ,
குசேலனை நண்பனாய் பெற்று
குசேலனுக்கு தன நட்பில்
வாழ்வு தந்தபோது
என் நண்பனே
நானும் நீயும் நண்பர்கள்
பள்ளிப் பருவம் முதல் '
இன்றோடு நம் நண்பிற்கு
வயது ஐம்பது
நம் நட்பில் குறை ஒன்றும் இல்லை
இதை, நான் இந்த உந்தன்'நான்',, உன் நட்பின்
நிழலிலேயே வளர்ந்து
ஆளான இந்த நான்
உரக்க கூறி மகிந்திட
ஆசைப் படுகின்றேன்
இந்த உன் நண்பன் குசேலன்!
உனக்கு இன்று எப்படிச் சொல்லி
வாழ்த்துக்கூறுவேன் தெரியவில்லை
நீயே சொல்லுவாயா எந்தன்
கண்ணனே!