ழகரம் அழகு

தமிழ் மொழிக்கு தனிச்சிறப்பு
இடையின மெய் எழுத்து 'ழ'
தமிழிலே' ழ' கரம்,பழத்தில் 'ழ'கரம்
பெண்ணே உன்னை 'பேரழகி' என்பேன்
அதுவும் 'ழ' கொண்டுதான் இப்படி,
'ழ' இல்லாமல் தமிழ் இல்லை அதுபோல்
'ழ' இல்லாமல் உன்னை அழகி என்று
என் மொழியில் எப்படி சொல்வேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Aug-17, 8:31 pm)
பார்வை : 204

மேலே