அம் ம்+ஆ

விருட்சமாக நீ இருந்து
நல் விதையை எனை
சுமந்து பூமியில் சிறு
கன்றாய் உருவாக்கி
உயிர்மெய்யை தந்தவள்.

கருவரை பெட்டகத்தில்
வையகத்தின் வாழ்வியலை
சொல்லால் உணர்த்தியவள்
இருகை கூப்பி ஆயிரம்
ஆயிரம் பாத வணக்கங்கள்.

தரம் பார்த்து பிரிக்கப்படும்
வைரங்கள் யாவும் தாயுக்கு
முன் நிகரில்லை,மனம் வீசும்
உயர்ந்த மலர்கள் யாவும் என்
தாயோடு உயர்வதில்லை.

இருகரை தொட்டு உருண்டு
ஒடும் காற்றாற்று வெள்ளமே
என் தாயை நீ வெல்வதில்லை
மாறாக அவள் கையில் சரண்
புகுந்து விதி மோட்சம் பெறுகின்றாய்.

எழுதியவர் : சூர்யா. மா (10-Aug-17, 12:36 pm)
பார்வை : 502

மேலே