உன் காதலை புரிந்தவளாய் பிரிகின்றேன்
உன்னை உயிராய் நேசிப்பவள் - நான்
என் மூச்சுக்காற்றுக் கூட
மூர்க்கத்தனமாய் சொல்கிறது என் உயிர் நீயென்று
என் இதயத்தின் சப்தத்தை கேட்டுப்பார்
என் காதலை உன்னிடம் உச்சரிக்கும்
நான் மழைத்தூறலாய் காதல்
கொள்ள வில்லை மலைச்சாரலாய் காதல் கொண்டவள்
என் காதலை நீ பொய்யாக்க போடும்
வார்த்தைகளின் அர்த்தத்தில் முடிந்துவிடும் என்று எண்ணிப் பார்க்காதே நம் காதல் சொந்தம்
இது இதய இராட்ஜியத்தில்
அன்பால் கட்டப்பட்ட கோட்டை
உன் சொல்லெனும் யுத்தத்தால்
சுக்கு நூராகி போகாது
ஒரு நாள் புரிவாய்
நம் காதல் பயணம்
நெடும் பாதையில் தொடரும் என்று காத்திருந்த நாட்க்கள் கானல் நீராய் ஆனதே
உன் நினைவுகள் வெந்நீரில்
வீழ்ந்து கரையும் சக்கரையாய்
என் கன்னங்களில் கண்ணீராய் கரைகிறதே
அன்பே அன்பே என்றழைத்த எனதுள்ளம் வார்த்தை கால்களுக்கெல்லாம் கடிவாளம் இட்டுக்கொண்டது
என்றாலூம்
என் காதலை புரியாமலே பிரியலாம் என்ற உன் காதலை புரிந்தவளாய் பிரிந்தே செல்கின்றேன் .