கொஞ்சம் பேசனும்

உதிராத பூ இல்லை
காற்று ஊதாமல் பலூன் இல்லை
விடியாத இரவும் இல்லை
கலையாத கனவும் இல்லை

உன்னை நினையாத நிமிடம் இல்லை
உருகாத பனியும் இல்லை
என்னை உருக்கும் நினைவு உனது
கண்னை மறைக்கும் அழகும் உனது

மறைந்து நின்று பார்த்தே-என்னை
மறந்து போக வைத்தாய்
மறந்தாலும் வறனும்-உன்
மடியில் படுத்து அழனும்

மாறி மாறி தோற்கடித்தான்
தோல்வி என்னை
தோல்வியை தோற்கடித்த
அனுபவத்தை பகிரனும் உன்னிடம்...

எழுதியவர் : யுவராஜ்.எஸ் (10-Aug-17, 2:39 pm)
பார்வை : 338

மேலே