தாய் அன்பிற்கீடாகுமா
தாய் அன்பிற்கீடாகுமா ???
தாயினுடை அன்புள்ளம்
தரணிதனை ஆண்டிடுமே !
வாயினுள்ளே உதிரத்தை
வருணனாகிப் பாலூட்டுவாள் !
பாயினுள்ளே சுருண்டாலும்
பாதுகாப்பாள் பத்திரமாய் !
நோயின்றி வாழ்ந்திடவே
நோகாமல் தவமிருப்பாள் !!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்