விளை நிலம்
விளை நிலத்தை பார்கையிலே
பரவசம் வந்து மோதுதே
என் வாழ்வின் வசந்தமே
வயல் நிலத்தின் பயிரே
நீ வளந்து உயர்ந்து நிற்பதாலோ
உள்ளம் ஆனந்தம் அடைகிறதே
உன்னை பூமியிலே விதைக்க முன்னர்
உன்னில் உறுதி இல்லை எங்களுக்கு
ஆனாலும் சந்ததியை வாழ வைத்து
வாழும் நாட்களில் சந்தோசத்தை
உண்டாக்க வளர்ந்து நிற்பதாலே
மலர்ந்து நிக்கிறதே
சந்தோச உணர்சிகளுமே
உனக்கில் விதை இடும் போதே
விலை நிலமே
உன் முகமும் பசுமை கொண்டன
உன் நிலம் இல்லையெனில் என்ன செய்வேன் நானும்
உன் சொந்தம் இருந்தாலோ போதுமே
உலகுக்கு உணவு கொடுப்பேன்
வாழ்வை வாழ வைக்கும்
விளை நிலமே மெல்ல மெல்ல
நீயே என் சொந்தமனாய்
உன்னை விட்டுதான் நான் போவேனோ
உன் விளைவு இன்றி தான் நான் வாழ்வேனோ
உன்னால் பிறக்கும் வாழ்வின் இனிமை
உலகின் வறுமையை நீக்க ஒளியை கொடுக்கும்
உன் நிலமே இல்லையெனில் உலகமே
வறுமையில் மூழ்கும்

