நட்பிற்கு வாழ்த்துக்கவி - 4

நட்பிற்கு வாழ்த்துக்கவி  - 4

கவிஞர் கலாவிசு அவர்களுக்கு
வாழ்த்துக்கவி

வானிற்குச் சிறப்பு நிலா
கவிதை வானிற்குச் சிறப்பு கலா

இவர் கலா எனும் பெயரைக்கொண்ட
கவியுலகக் காலா

புதுவைத் தமிழ்ச்சங்கம் வாயில்
கிழக்கைப் பார்த்துள்ளது
இவர் வீட்டு வாயிலோ
தெற்கைப் பார்த்துள்ளது
இதுதான் வித்தியாசம்

இவர் மையல் கொண்டு
மையில் எழுதிய கவிகளை
வாசிக்கும் போதெல்லாம்
அதில் மயில் வசிப்பது தெரிகின்றது

இவர் அன்னை ஜோதிக்குப்
பிறந்தவர் என்பதினும்
தமிழுக்காக சாதிக்கப் பிறந்தவர்
என்பதே சிறப்பு

பாரதியார் கவிதைகளை
ஓவியமாக்கச்சொன்னேன்
அனைத்துப் பக்கத்திலும்
இவர் முகத்தை வரைந்தான் அந்த ஓவியன்

ராமசாமி எழுதிய கவிதை நீ
கவிதை வானின் விதை நீ

அமிர்தாவை ஈன்ற
அமிர்தம் நீ
கார்திக்கைப் பெற்ற
கார்த்திகை நீ

பிறந்ததோ காரையின் கரை
உன் மனதில் ஏது கரை
நீ எங்களுக்கோ கலங்கரை
கவிஞர்களை அலைய வைக்காது
அலைகளாக்கும் கடற்கரை

வள்ளுவன் இயற்ற மறந்த
ஒரு குறள் உன் குரல்

உன் பென் மை
குறையும்போதெல்லாம்
பெண்மையின் மேன்மை
நிறைந்தது காகிதத்தில்

நீ மீசையில்லாத பாரதி
ஆசையில்லாத தெரசா

தலாய்லாமா இறந்தகணம்
பிறக்கும் குழந்தையே
அடுத்த தலாய்லாமாவாகின்றது திபெத்தில்
நீ பிறந்தபோது
எந்த மகாகவி இறந்தானோ விபத்தில் ?

வரலாறு இப்படித்தான்
வாசிக்கப்பட இருக்கின்றது

எண்ணிற்கு ராமானுஜம்
கண்ணிற்கு ஜோதி ஐ கேர்
விண்ணிற்கு நிலா
பெண்ணிற்கு கலா

நீ உன் தலையில் சூடியிருக்கும்
நல்லப் பூக்களைவிட
உன் தலைமையில் கூடியிருக்கும்
நல்ல நட்புக்களையல்லவா நேசிக்கின்றாய் .

பூக்களின் இதழிலிருந்து
மணம் வருவதைப்போல
உன் மனதிலிருந்து இதழ்வழியே
தமிழல்லவா வருகின்றது .


Close (X)

5 (5)
  

மேலே