மதுரை எனும் கூடல்நகர்

தொன்மை எனும் தொட்டிலில்
இளைப்பாறும் மதிரை நகர்
மீன்கள்.

சங்கமித்தது வைகை நகரில்
தமிழுக்கோர் மேன்மை பிறந்தது
சபையினிலே.

பொற்தாமரை தாய் ஈன்றெடுத்த
திருக்குறள் எனும் பொதுவுடைமை
நூல்.

மதுரை மாநகரமே பற்றி எரிந்தது
மங்கை அவள் சிலம்பொலியின்
சிற்றத்தில்.

சல்லி பயல்கள் எல்லாம் துள்ளி
விளையாடும் அவனியாள் வீர
சல்லிகட்டு.

மல்லிகைமாநகரம் இது கன்னி
பெண்ணின் தலைநகரம் சூடிய
என் இல்லாள்.

கடல் கொண்ட தென்மதுரை மீள்
என தென்னவன் இழுத்து வந்து
உயி்ர்பித்தான்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
பொங்கும் தமிழ் மழலை தமிழ் நம்
மதுரைத்தமிழ்.

எழுதியவர் : சூர்யா. மா (12-Aug-17, 4:49 pm)
பார்வை : 124

மேலே