அவளும் அழகும்

கதிர் மறையும்
நுனிப் பொழுதுகளில்
உன் கண்கள்
வேண்டுகின்றேன்
இருளென்றால் சற்று
பயமெனக்கு..!

மதி மறையும்
நுனிப் பொழுதுகளில்
உன் கூந்தல்
வேண்டுகின்றேன்
குளிரென்றால் சற்று
பிரியமெனக்கு..!

உன் வாசனை
மோதியே தினம்
வசிக்கின்றேன்..!

உன் யோசனை
தூவியே கவி
வாசிக்கின்றேன்..!

என் வீட்டுக்
கோலங்களை
மிதித்துச் செல்லாதே
பின் ஒட்டிய மாவினை
துரத்தும் எறும்புகளுக்குப்
பின்னே எனைத் தள்ளி
கொல்லாதே..!

நான் கடந்து
வந்த காலமெல்லாம்
உன் காதல்
மட்டுமே மிச்சம்..!

என்றோ ஒரு நாள்
நீ இறப்பாய் அதுவொன்றே
என் வாழ்வின் அச்சம்..!!


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (13-Aug-17, 6:50 pm)
Tanglish : avalum alagum
பார்வை : 647

மேலே