நான் நேர்மறைகளையே அளக்கிறேன்
நான் எதிர்மறைகளை அளக்கிறேனென்றால் அதன் அர்த்தமென்ன?
பொறாமைப்படு என்றுரைத்தால் அதுவே எதிர்மறை...
பொறாமைப்படுதல் தவறென்று உரைத்தால் அதுவே நேர்மறை...
ஆக நான் நேர்மறைகளையே அளக்கிறேன்...
எதிர்மறைக்கும், நேர்மறைக்கும் இடையேயான வித்தியாசத்தை உணராவிடில் நேர்மறைகளெல்லாம் எதிர்மறைகளாகவும்,
எதிர்மறைகளெல்லாம் நேர்மறைகளாகவும் தோன்றுகிறது ஐயமின்றி...
நான் எழுதுகிறேனென்ற அகந்தையில் எதையும் எழுதுவதில்லை...
குற்றங்களைச் சுட்டிக்காட்டுவது எதிர்மறை அல்ல...
நேர்மறை...
மீண்டும் சொல்கிறேன், நான் அளப்பது எதிர்மறைகளை அல்ல...
நேர்மறைகளையே...
சூரியனின் ஒளிக்கீற்று எப்படி காரிருளைக் கிழித்தெறிந்து வெளிச்சமூட்டுகிறதோ,
அதுபோலவே தமிழ்வழி எழுதுகிறேன் அறிவுச்சுடர் அனைத்து மனிதர்களிடத்தும் பிரகாசிப்பதற்காக...
புரியாத மொழியில், முறையில் எழுதுவது ஆரோக்கியமான உணவைச் சமைத்து சாக்கடையில் கொட்டுவதற்கு இணை...
புரிந்தவருக்குப் பகுத்தறிவே துணை...
வாழ்வது கொஞ்சக்காலமே...
அன்பும், கருணையும் நிரம்பி வழிய நல்லறிவின் வழி அனைவரும் வாழ்ந்தால் பூலோகமே,
பூக்கோலமாகுமே...

