கட+உள்=கடவுள்
வலியும் சுகமும்
வாழ்க்கையோடு ஒட்டி பிறந்ததா?
இல்லை,
நாம் விரும்பியது
நாம் தேடி பெற்றுக் கொண்ட
வரங்கள்.
புண்பட்ட காயங்கள் வலி அல்ல
புழுதி காடாய் போன நம் மனம்
தரும் வலிகள் அல்லவே
வேதனை..
வேண்டியதை தேடி பெற்றுக் கொண்ட சிறு பிள்ளை மனம்
அல்லவே நம்
மனம்.
எத்திசைக்கும் அலையாதே
உன் அகம் தன்னில் உறங்கும்
அமைதி அல்லவே உன்மனம்
இதை யார் தருவார்கள்
உனக்கு.
நிலைத்துக்கொள் உன்னுள்ளே
அகத்திற்கு நீ கொண்ட பொருள்
ஏராளம் அது அல்ல இங்கு
உண்மை.
புத்தன் கண்ட பேரின்பம் அல்லவே அது, குப்பையான உன் மனதை தும்பை பூவாக்கும் சூத்திரமே
அது.