வேற்றுமைகளைப் பாராட்டி வாழ்வது மனித குலத்தை வேரறுக்கும்

பிறப்பால் நான் பெருமை அடைவனோ?
இல்லையே.
பிறப்பால் பெருமை கிட்டுமென்றால் துஷ்டரும் பெருமைக்குரியவரே என்று பாராட்டி சிறைச்சாலை மூடப்பட்டிருக்க வேண்டுமே.

தன் நாட்டைக் காப்பவன் சத்திரியனென்றால்,
தன் வீட்டை, தன் குடும்பத்தைக் காப்பவனும் சத்திரியன் தானே.
அதேன் நாடு காத்தவன் போற்றப்பட்டு கௌரவிக்கப்படுகிறான்?.
வீடு காத்தவன் சிறையில் அடைக்கப்படுகிறது??.

தனது, தன்னைப் போன்றவர்களின் உரிமைக்காக போராடினால் தீவிரவாதமென்கிறான்..
அப்போ நாட்டுக்காக உயிர்களைக் கொல்லும் இவர்களின் செயலுக்கு என்ன பெயர்?

குழப்பும் உலகில் தெருவுக்கு தெருவு சாதிகள்...
நாட்டுக்கு நாடு மதங்கள்...
உலக அரசியலின் சூழ்ச்சியாலே,
சிலர் மட்டும் தீவிரவாதிகள்...

உயிர் பறிக்கும் ஆயுதம் ஏந்தும் எவரும் தீவிரவாதிகளே தானே..
இதில் இராணுவ வீரர்களுக்கு மட்டுமென்ன விதிவிலக்கு?...

நாட்டுக்கு நாடு பிரித்துக் கொண்டு வாழும் மனிதர்களின் மனங்களை இப்படி பிரித்து வைத்தது யார்??

யாரும் மற்றவரைக் காப்பாற்ற இயலாதென்பதே உண்மை...
அவரவரைக் காப்பாற்றும் சக்தி மட்டுமே அவரவரிடம் உள்ளது...
இச்சக்தி இன்னும் அதிகரிக்க வேண்டுமானால் மனதில் மிகுந்திருக்கும் பாகுபாடுகளை களையெடுங்கள்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-Aug-17, 7:41 am)
பார்வை : 424

மேலே