நல்லதோர் விதை விதைப்போம்

நல்லதோர் விதை விதைப்போம், அன்பு சகோதரா என்னுடன் நீ வாராய்...
பண்புமிகு சுடரை அந்நல்லதோர் விதையில் புகுத்தியே விதைப்போம், அன்பு சகோதரா என்னுடன் நீ வாராய்...
புத்தி நாசமடையாத பகுத்தறிவு யுக்தியை அந்நல்லதோர் விதையோடு சேர்த்தே விதைப்போம், அன்பு சகோதரா என்னுடன் நீ வாராய்...

இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் இயற்கை விதையாய் அந்நல்லதோர் விதை விதைப்போம், அன்பு சகோதரா என்னுடன் நீ வாராய்...
சமத்துவம் செழுத்திடும் விதையை விதைப்போம், அன்பு சகோதரா என்னுடன் நீ வாராய்...
பகைமை நீக்கி அருளும் அன்பு விதை விதைப்போம், அன்பு சகோதரா என்னுடன் நீ வாராய்...

கொல்வதும், கொல்லப்படுவதும் தடுக்க, கருணையாலே செய்ததோர் விதை விதைப்போம், அன்பு சகோதரா என்னுடன் நீ வாராய்...
நம்மை வாழ்வித்துக் காக்கும் இயற்கையை நாம் போற்றி பாதுகாக்க வேண்டுமென்ற நன்றியையுணர்த்தும் விதையை விதைப்போம், அன்பு சகோதரா என்னுடன் நீ வாராய்...
உடல்பலத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் விதையை விதைப்போம் அன்பு சகோதரா என்னுடன் நீ வாராய்...

பஞ்சமில்லா, வஞ்சமில்லா விதை விதைப்போம் அன்பு சகோதரா என்னுடன் நீ வாராய்...
நீயும், நானும் கைகோர்க்க உயிர்த்திடும் நல்லதோர் விதை...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-Aug-17, 8:41 am)
பார்வை : 780

மேலே