வேண்டும் சுதந்திரம்

ஆண், பெண் வேறுபாடின்றி கற்க வேண்டும் கல்வி சுதந்திரம்...
வேற்றுமை ஒழிய, இனவெறி அழிய வேண்டும் எழுத்து சுதந்திரம்...
ஆண்டான், அடிமையென்ற விதிகள் ஒழிய வேண்டும் சுயாட்சி சுதந்திரம்...
உண்டைப் பந்துலகில் சிறு நிலப்பரப்பையும் எல்லைகளால் பிரித்துக் கொண்டு நாடுகளென்று ஓதிடும் மடமை தீர வேண்டும் சுற்றுப்பயணச் சுதந்திரம்...

பணமே உலகமென்று ஓடிடும் ஆடம்பர வாழ்வை விட்டு விலகி போதுமென்ற மனம் உருவாக வேண்டும் சமத்துவ சுதந்திரம்...
பிறரை ஏமாற்றாமல், பிறரால் ஏமாறாமல் வாழ வேண்டும் வாழ்க்கை சுதந்திரம்...
இயற்கையின் மாண்பினை உணர வேண்டும் இயற்கை சுதந்திரம்...
அறிவை வளர்க்க வேண்டும் அறிவார்ந்த தேடல் சுதந்திரம்...

எதிர்பார்ப்பில்லா அன்பில் வாழ வேண்டும் ஆன்ம சுதந்திரம்...
அன்பில் உண்மையாய் துரோகமில்லாமல் வாழ வேண்டும் மனசாட்சி சுதந்திரம்...
கருணையைக் கடைபிடித்து வாழ வேண்டும் அனைத்து உயிர்களுக்கும் உணர்வு உண்டென்ற பரந்த புரிதல் சுதந்திரம்...
பேதங்களெல்லாம் நீங்கிடவே யாவரும் ஒன்றுபட்டு ஆக்கப்பூர்வமாய் உழைத்து வாழ வேண்டும் உலகில் அனைத்து மனிதர்களும் நம் உடன்பிறப்புகளென்ற சகோதரத்துவ சுதந்திரம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-Aug-17, 11:15 pm)
Tanglish : vENtum suthanthiram
பார்வை : 2294

மேலே