கிடைத்துவிட்டதா சுதந்திரம்
மனதை அடிமை கொண்ட பயத்திற்கு முக்தி அளித்திட வேண்டும் தைரியச் சுதந்திரம்...
நாமென்ன அடிமைகளா?
எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தின் அனுமதி கேட்க வேண்டியுள்ளதே...
நாமென்ன திருடர்களா?
இப்புவி மீதினிலே பயந்து பயந்து உலாவிட வேண்டியுள்ளதே...
மோட்டார் வாகனத்தில் சென்றாலே மறித்து கப்பம் கேட்கிறான் காவல்துறை...
காசு கொடுத்தால் நீதியை விற்கிறான் நீதித்துறை...
அப்பாவிகளைக் கொன்று குவிக்கிறான் இரக்கமற்ற இராணுவப்படை...
யாரடா நீங்களெல்லாம்?
ஏனடா இப்படி சீரழிந்த வாழ்க்கை வாழ்கிறீர்கள்??
அடுத்தவன் உறுப்பைத் திருடி சம்பாதிக்கிறது மருத்துவத் துறை...
மருத்துவம் பார்க்கவும் அடையாள அட்டை வேண்டும்...
உயிருக்குப் போராடும் நிலையிலும் அடையாள அட்டை வேண்டும்...
மனித தன்மையற்ற அமெரிக்காவில் சட்ட திட்டம் எங்களுக்கு எதற்கு??
தனித்துவமுடைய மக்களின் தனித்துவத்தைப் பறித்து பெயருக்கு சுதந்திரம் கொண்டாடி இனிப்பு வழங்கிடும் மடமை ஒழியாத வரை எமக்கில்லை சுதந்திரம்...
உமக்கும் இல்லை சுதந்திரம்...
மனிதா முழுச்சுதந்திரத்தை அடையாளம் காண வேண்டுமெனில் மனதில் தோன்றிய பயம், கோபம், அழுக்காறு, அகந்தையை அழித்து அன்பையும் கருணையும் குடியேற்று...