எது சுதந்திரம்

எது சுதந்திரம்

வெள்ளையனிடம் பெற்று
கொள்ளையனிடம் கொடுத்ததா?

தெரிந்தே அடிமையானோம் அன்று
தெரியாமல் அடிமையாகிறோம் இன்று...

ஊழல் பறைசாற்ற
உள்ளம் உடைவதை
யார் அறியோர்

கல்விக்கும் மருத்துவத்திற்கும்
பணம் தருவதுதான் சுதந்திரமா...

பிறப்பிலும் இறப்பிலும்
ஊழல் நுழைந்ததே
அது சுதந்திரமா...

பெண்மையை போற்றி
மேடையில் பேசுகிறாய்
பெண் சுதந்திரம்
இங்கே உண்டா ?

கட்சிகளை நம்பினாய்
நடுத்தெருவில் நின்றாய்

பணத்திற்கு ஆசைப்பட்டாய்
பண்பாட்டை விற்றாய்

மேல்நாட்டு மோகத்தில்
தாய்நாட்டை மறந்தாய்

உன் அறியாமையால்
இத்தேசம் இழந்தது
கொஞ்சமா நெஞ்சமா

போராடி பெற்ற சுதந்திரத்தை
தினந்தினம் போராடி போராடி
வாங்கும் நிலையிலுள்ளோம்

இது தான் சுதந்திரமா

முன்னின்று போராட
துனிவில்லை என்றாலும் பின்னின்று பலம் சேர்க்க கூட மனமில்லையா உனக்கு

முகநூலிலும் டிவிட்டரிலும்
கருத்து தெரிவிக்கும்
உள்ளங்கள் களத்தில்
மௌணம் கொள்வது ஏன்

தனக்கு நடக்கும்வரை
அனைத்தும் வேடிக்கையென்றால்
உன்னை வேடிக்கை பார்க்கவும்
ஒருவனுண்டு என்பதை மறந்துவிடாதே இன்றே
விழித்திடு மனிதா....

எழுதியவர் : சே.இனியன் (15-Aug-17, 10:56 am)
சேர்த்தது : இனியன்
Tanglish : ethu suthanthiram
பார்வை : 178

மேலே