இயல்புக்கு மீறிய ஒரு கனவு-சந்தோஷ்

எளிமையான சுடிதார் அணிந்து
ஒளவையார் ஸ்கூட்டியில்
சென்னை கலைவாணர் அரங்கம் வந்தார்.

ஒளவையுடன்
ஜீன்ஸ் பேண்ட் காட்டன் சர்ட்டில்
கூந்தல் விரித்த
ஹேர் ஸ்டைலில்
நவீன டிஜிட்டல் சிலம்போடு
வந்தாள் கண்ணகி.
நான் தான் வரவேற்றேன்.
ஒளவை என் கன்னத்தை
கிள்ளி.. நெல்லிக்கனி கொடுத்தார்.

கண்ணகியுடன்
ஹலோ என கை குலுக்க
நீண்ட என் கைகளை பற்றாது
அலட்சியம் செய்தாள் .
திமிர்பிடித்தவள் போலிருக்கு.

அது ஒரு புத்தக வெளியீட்டு விழா
என் கவிதை புத்தகம் தான்.

கம்பனுக்கு அழைப்பு விடுத்திருந்தேன்.
ஒளவை வந்தால்
வரமாட்டேன் என்கிறார்.
ஆதிகாலத்து இலக்கிய விரோதம் போல.

கம்பனுக்கு பதில்
நக்கீரனை அழைத்தது தான்
நான் செய்த தவறு.

ஹைக்கூ கவிதையில்
பொருள் பிழை என விளாசி
சொற்களால் எனை அர்ச்சனை செய்கிறார்.
ஒளவை தான் எனக்கு துணை நின்று
பொருட்பிழை தான்
ஹைக்கூவின் ஹைலைட் என விவாதம் செய்ய..

நக்கீரனுக்கும் ஒளவைக்கும்
கருத்து மோதல்
ஆரம்பம் ஆகி
உச்சக்கட்டத்தில் அந்த கட்டிடமே
அதிரும் வேளையில்..

நானோ..கண்ணகியின் கண்ணழகில்
கிறங்கியதை
கண்டுக்கொண்ட
கண்ணகி...

அடேய் தேரா கவிஞா
தற்காப்பு முக்கியமில்லை
தன்மானமே முக்கியமென
தன் ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்த
சிகரெட் லைட்டரால்
அரங்கத்தை எரிக்க முயல..

அய்யோ கண்ணகி மேடம்..
என் அரங்கமல்ல
அது அரசாங்க அரங்கம்.
அதிர்ந்த வேளையில்
கனவு விடிந்தது எனக்கு.!

--

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (16-Aug-17, 12:43 am)
பார்வை : 142

மேலே