இராத்திரி தோழி - சந்தோஷ்

இந்த இராத்திரியின் மடியில்

தலைச் சாய்த்துக் கொள்கிறேன்.

தனிமைக்கான காரணங்களை

இனிமையான மெளனமொழியில்

மொழிப்பெயர்த்து சொல்கிறேன்.இந்த இரவு எனக்கு தோழியானவள்.

என்னுடன் ..என் சுதந்திர நிர்வாணத்தோடு

உடனிருந்தாலும்...

என்னால்..இந்த இரவுக்காரிக்கு

எந்த களங்கமும் உண்டானதில்லை.எனக்கு தெரியும்...

இராத்திரிக்கென ஒரு கண்ணியம் உண்டு.

இந்த இரவுத்தோழிக்கு

தன்மானமும் உண்டு.

எனக்கும் கூட

மானமென

கொஞ்சமல்ல நிறைய சுயம் உண்டு.


Close (X)

0 (0)
  

பிரபலமான விளையாட்டுகள்

மேலே