உனக்கும் ரோஜாவுக்கும் வேற்றுமை இல்லை

நான் தந்த ஒற்றை "ரோஜாவை "
கையில் வைத்துக்கொண்டே
ரசித்துக்கொண்டு இருக்கிறாய் !

அலைபேசியில் உன் பதிலுக்காய்
என் காத்திருத்தல் !

ஒற்றை " புகைப்படம் " அனுப்பி
விண்ணுக்கு இறக்கை இன்றி
பறக்க செய்து விட்டாய் !

குறும்புக்காரி !

"ரோஜாவை " படம் எடுத்து
திரும்ப அனுப்பி விட்டாய் போல
அலைபேசியில் !

எழுதியவர் : முபா (17-Aug-17, 7:33 pm)
பார்வை : 531

மேலே