பரோட்டா
[] பரோட்டா ...
----------------------------------------------------------------------------
எவ்வளவு சுத்தமாக தயாரித்தாலும்
ஒரு அழுக்கான உணவு !
பரோட்டா ...
உணவகத்தின் முதுகெலும்பு
ஊற்றிக்கொள்ள மூன்று குழம்பு !
காரமாய் இனித்திடும் ஓர் கரும்பு
கடைசியாய் கிடைத்திடும் நோய் உடம்பு !
உடலுக்கு உகந்த உணவல்ல !
தமிழர் உணவோடு ஒப்பிட்டால்
உண்மையில் இது உணவே அல்ல !
பரோட்டா -
பசையின் பரிணாம வளர்ச்சி !
அனைவரோடும் ஒட்டிக்கொண்டிருப்பதே
அதற்க்கு ஒரே சாட்சி !
சலவை செய்து கண் கவரும்
ஒரு கழிவு கலவை !
மலிவாய் கிடைத்து பின் கூட்டும்
மருத்துவ செலவை !
கண்முன்னால் ; காட்சி தந்தால்
உமிழ்நீர் சுரக்கும் !
கட்டுப்பாட்டால் ; கடந்து வந்தால்
உடல்நலம் சிறக்கும் !
-யாழ் ..