இணையும் முன் சிறு பிரிவு
கண்ணோடு கண் பார்த்து
காதல் கொண்டோம் இருவருமே…
பேசி பேசியே என்னை பேதலிக்க வைத்துவிட்டாய்
உன் பேரன்பினால்…
பழகிய நினைவுகள்
பசுமையாய் நம் மனதில் ...
சட்டென்று ஒருபிரிவு
சடுதியில் ஏன் வந்ததோ ?
கண்களை கண் காண
காலங்கள் சில ஆகலாம் …
நினைவுகள் ஒன்றே
நம்மை இணைக்கும் மொழியாகி போகலாம் ...
சத்தமின்றி முத்தமொழி பேசும்
உன் இதழ்கள் எங்கே ?
தானாக தடுக்கிவிழ வைத்து
தாங்கி பிடிக்கும் உன் கரங்கள் எங்கே?
ஒன்றாக நடந்துவிட்டு
ஓரிடத்தில் பிரிகையிலே
ஒற்றை விழியால் நீ பேசும்
காதல் மொழி எங்கே ?
அழியா காதலால் உன்னை அப்போதே கட்டிவிட்டாய்-என் மனதில்
அப்படியே ஒரு மஞ்சள் கயிறை எப்போ வந்து கட்டபோற -என் கழுத்தில்?
---செந்தமிழ் மொழி