செந்தமிழ் மொழி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : செந்தமிழ் மொழி |
இடம் | : Orathanadu |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 17-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 105 |
புள்ளி | : 8 |
கன்னி தமிழில் கவியெழுதும்
என் தோழனே...நான்
கணநேர நொடி மட்டும்
கடவுளாகும் வாய்ப்பிருந்தால்
உன் கடந்தகால நிகழ்வுகளில்
தடுக்கிவிழுந்த தவறுகளை
உன் நினைவுக்கும் காட்டாமல்
நிச்சயமாய் அழித்திருப்பேன் .
செறிவாய் நீ எழுதும் கவியினுள்
உன் சிந்தனை கருவாக நான்மாறி
சிதைந்துவிட ஆசையெனக்கு .
கன்னி தமிழில் கவியெழுதும்
என் தோழனே...நான்
கணநேர நொடி மட்டும்
கடவுளாகும் வாய்ப்பிருந்தால்
உன் கடந்தகால நிகழ்வுகளில்
தடுக்கிவிழுந்த தவறுகளை
உன் நினைவுக்கும் காட்டாமல்
நிச்சயமாய் அழித்திருப்பேன் .
செறிவாய் நீ எழுதும் கவியினுள்
உன் சிந்தனை கருவாக நான்மாறி
சிதைந்துவிட ஆசையெனக்கு .
உன் விரல் கோர்த்து
நடக்கும் தடத்தில்
கிடக்கும் முள்கூட
மொட்டாகுமே என்கால்களுக்கு !
துணையாக நீ வந்தால்
தூரமும் தொலைந்து போகுதே...
இணையாக நாம் நடக்க
இடைவெளியும் இம்சை ஆகுதே...
அன்பினால் வந்த ஆசை...
தொட்டில் பருவம் முதல்
தொடர்ந்து வரும் உன் அன்பில்
தொலைந்துதான் போகிறேன்!
தேடித்தேடி நீ வந்து
தெகிட்டாமல் பாசம் காட்ட
திணறித்தான் போகிறேன்!
கல்வி கற்கையிலே
கவிதை போட்டியிலே
கட்டாயம் பரிசு எனக்கே .
காரணம் -கவியினை எழிலுடன்
கலங்காமல் நான் மொழிய
கற்று தந்தது நீ தானே!
கண்ணாமூச்சி விளையாட்டில்
கண்டுபிடிப்பது நானென்றால்
வேண்டுமென்றே என்முன் வந்து
விரைவாய் என்னை விடுவிப்பாயே!
அப்பாவின் பாசக்கூட்டில்
அடங்கி விடுவோம் நாம் இருவர்
எனக்கு மட்டும் இரட்டிப்பு மகிழ்ச்சி
பாசக்கூட்டில் இரு போர்வை
ஒன்று அப்பா , மற்றோன்று நீ !
தொலைதூரம் சென்றால
கசிந்துருகும் என் அன்பினை
கனவுகளிலேயே தந்து விடுகிறேன் உனக்கு ...
காட்சியினில் தந்தேனென்றால்
கலாச்சார குற்றம் என்பர் நம்மில் பலர் ...
பக்குவமாய் நீ அதை
பத்திரப்படுத்தி வைத்திரு...
பாதி சாமத்தில் நான் கேப்பேன்
திணறி நீ போகாமல்
திருப்பியே கொடுத்திடு
வட்டியுடன் என் அன்பை...
என் அம்மாவாகிய அப்பாவிற்கு…
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கு...
முக்காலத்திலும் நீங்கள் துணையெனக்கு...
கருவில் சுமந்த தாயை கண்டது நினைவில் இல்லை...
உங்கள் கைபிடித்து நடைபயின்றது மட்டுமே என் வாழ்வின் ஆரம்பம்....
பள்ளி பருவம் தொட்டு…
உங்களின் பாசம் உணர்ந்த நாள்தொட்டு …
பார்க்கவில்லை ஒருவரை உங்களின்
பாசத்திற்கு ஈடான மற்றறொருவரை ....
பச்சோந்தி பாசம் காட்டி
பாதியில் விட்டுச்செல்லும் பலவகையான உறவுகள் ...
பலியிடப்படுவது என்னவோ பாசம் வைக்கும் உண்மை மனம்...
பணம் என்ற ஒற்றை வார்த்தையில்
மனதினை ஓடவிட்டு செல்லும் உறவுகளிடம்
பாசத்தினை எதிர்பார்த்தால்
பரிசாய் கிடைப்பது என்னவோ
ஆசைக்குள் விஷம்
ஆசைக்குள் விஷம் வைத்து
என்னை அழ வைத்தது யாரோ?
அன்பிற்குள் பகை வைத்து
உறவை பிரித்து வைத்தது யாரோ?
அழகழகாய் கண்ட கனவை
கலைத்துவிட்டது யாரோ!
கலைந்தபின்னும் புதுக்கனவை
காணவைப்பது யாரோ!
பாசமெனும் நதியினிலே
நான் மூழ்கித் திளைத்தேன்
பல பேர் கரையேற
படகாக உழைத்தேன்!
காலமெனும் காற்றினிலே
கரை ஒதுங்கிப் போனேன்
கரையொதுங்கிய பின்னாலே
தனிமரமாய் ஆனேன்!
நேசம் வளர்த்த நெஞ்சத்தில்
வெறுப்பை வளர்த்தது யாரோ
வேஷம் போட்ட உறவுகளை
விளங்கிக் கொண்டதாலோ!
விளையாட்டாய் செய்த பிழை
விதியாகிப் போனதம்மா
விதியாடிய விளையாட்டில்
வாழ்க்கை வீணாகிப்போனதம்மா!
அடையாளம் அ
வெட்கத்திற்கு விடுமுறை
பள்ளிப் பருவத்தில் உனை
பார்த்திருக்கக் கூடாதா
பாவாடை தாவணியில் உனை
ரசித்திருக்கக் கூடாதா
பொங்கி வடிந்த கண்ணீரை
உன் பொன்விரல்கள்
தீண்டியிருக்கக் கூடாதா?
பச்சை ஆடையில் பருவத்தின் உச்சத்தில்
பார்த்துக்கொண்டேமே அப்போதாவது
இதயம் பரிமாறியிருக்கக்கூடாதா?
ஒரே பேருந்தில் ஒன்றாக பயணித்தோமே
அப்போதாவது பார்வைகள்
உரசிக்கொண்டிருக்கக் கூடாதா?
என் உள்ளத்தின் கவிதைகள்
எப்படியாவது உன் காதுகளுக்கு
கேட்டிருக்கக் கூடாதா?
ஒரே ஒரு முறை
உன் அலைபேசியை என்னிடம்
நீ தொலைத்திருக்கக் கூடாதா?
உன் வெட்கத்திற்கு வெட்கம் வந்து
விடுமுறை எடுத்திருக்கக் கூடாதா?
என