எனக்கொரு ஆசை
கன்னி தமிழில் கவியெழுதும்
என் தோழனே...நான்
கணநேர நொடி மட்டும்
கடவுளாகும் வாய்ப்பிருந்தால்
உன் கடந்தகால நிகழ்வுகளில்
தடுக்கிவிழுந்த தவறுகளை
உன் நினைவுக்கும் காட்டாமல்
நிச்சயமாய் அழித்திருப்பேன் .
செறிவாய் நீ எழுதும் கவியினுள்
உன் சிந்தனை கருவாக நான்மாறி
சிதைந்துவிட ஆசையெனக்கு .