தமிழியல் ----படித்தது

தமிழியல்
தமிழ்
மலையாளத் தமிழியல்
ஆங்கிலத் தமிழியல்
சிங்களத் தமிழியல்
சமசுகிருத தமிழியல்
கன்னடத் தமிழியல்
தெலுங்குத் தமிழியல்
துளு தமிழியல்
வங்காளத் தமிழியல்
மராத்திய தமிழியல்
இந்தித் தமிழியல்
பர்மியத் தமிழியல்
சீனத் தமிழியல்
அரபுத் தமிழியல்
மலாய் தமிழியல்
தாய் தமிழியல்
உருசியத் தமிழியல்
சப்பானியத் தமிழியல்
கொரியத் தமிழியல்
செர்மானியத் தமிழியல்
பிரெஞ்சுத் தமிழியல்
டச்சுத் தமிழியல்
போத்துக்கீசத் தமிழியல்
சுவீடிசு தமிழியல்
பாளித் தமிழியல்
பிராகிருதத் தமிழியல்
பிராமித் தமிழியல்
பாரசீகத் தமிழியல்
உருதுத் தமிழியல்
எபிரேயத் தமிழியல்


தமிழ் மொழியையும் தமிழர் பண்பாடு, வரலாறு, சமூகம், அறிவியல் போன்ற அம்சங்களையும் முதன்மையாக ஆயும் இயல் தமிழியல் ஆகும். தமிழியல் தமிழும் தமிழருக்கும் பிற மொழிகளுக்கும் இனங்களுக்கும் இருக்கும் உறவுகளைச் சிறப்பாக ஆய்கின்றது. தமிழையும் தமிழர் சார் விடயங்களைப் பிறருக்கும், பிறர் மொழியையும் அவர்களுடைய சிறப்புகளைத் தமிழ் புலத்துக்கும் பரிமாறும் ஒரு துறையாகவும் தமிழியலைப் பார்க்கலாம்.

தமிழும் தமிழரும் பிற மொழிகளுடனும் இனங்களுடனும் உறவுகளை வரையறை செய்யும் துறையாக தமிழியல் இருக்கின்றது. பிற மொழிகளையும் இனங்களையும் தமிழர்கள் அறியும், ஆயும் ஒரு துறையாகவும் இவ் இயலை பார்க்க வேண்டும். இன்றைய உலகமயமாதல் சூழலில் தமிழர்களுக்கு தமிழியல் முக்கிய இயலாக பரிணமித்துள்ளது.

தமிழியல் கல்வித்துறை தமிழை பாரம்பரியமாக ஆய்ந்த புலவர்கள் பண்டிதர்கள் மரபில் இருந்தோ அல்லது தமிழை தினசரி வாழ்வுக்கு பயன்படுத்தும் தமிழ் மக்களிடம் இருந்தோ தோன்றாமல் மேற்கத்தைய இன-மொழி ஆய்வு துறையின் ஒரு பகுதியாக தோற்றம் கண்டது. மேற்கத்தைய Oriental Studies - இந்தியவியல் (Indology) பின்புலத்தில் இருந்து தோன்றியது. இதன் நோக்கம் தமிழ் மொழியையோ தமிழர் சார் விடயங்களையோ மேம்படுத்துவது என்று சொல்ல முடியாது. மாற்றாக தமிழ் மொழியையும் தமிழர் சார் விடயங்களையும் ஆய்ந்து தங்களது தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்வதே ஆகும். காலனித்துவ நிர்வாகம், மத மாற்றம், தங்களது மேலாண்மையை நிறுவுவது ஆகியவை இந்நோக்கங்களுக்குள் அடங்கும். இன்று இத்துறை South Asian Studies என்று மருவியுள்ளது; ஆனால் இன்று இவற்றின் நோக்கங்கள் சற்று ஆரோக்கியமான மாற்றங்களுக்கும் உட்பட்டு நிற்கின்றன. எனினும் இன்றும் நாடுகளின் (எ.கா ஐக்கிய அமெரிக்கா) இராணுவ வெளிவிவகார நடவடிக்கைகளுக்கு இந்தத் துறைகளின் ஆய்வுகள் முக்கியமானவை; இத்துறைசார் புலமையாளர்களும் குறிப்பிடத்தக்க பங்களிக்கின்றார்கள்.

ஆரம்ப தமிழியல் ஆய்வாளர்கள் தமிழையும் தமிழரையும் கருப்பொருளாக நிறுத்தி, தம்மை சற்று உயரநிறுத்தி, ஊடறுத்து ஆய்ந்தார்கள்.[1] இவர்களில் காலனித்துவ ஜெர்மனிய, பிரெஞ்சு, போர்த்துக்கீச, ஒல்லாந்த (டச்சு), ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் முக்கியமானவர்கள். இவர்களின் ஆய்வுகள் பின்னாளில் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள அறிந்து கொள்ள பெரிதும் பயன்பட்டன.

இதுவரை பிறர் தமிழையும் தமிழரையும் ஆயும் ஒரு துறையாக தமிழியல் முதன்மையாக இருந்ததனால், இதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆக்கங்கள் பெரும்பாலானவை பிற மொழிகளிலேயே இருக்கின்றன. இன்று அனேக தமிழியல் ஆய்வுகளும் மாநாடுகளும் ஆங்கிலத்தில்தான் அமைகின்றன. தமிழ்நாட்டில் இடம்பெறும் தமிழர்களே பிரதானமாக பங்குகொள்ளும் களங்களும் ஆங்கிலத்தில் அமைகின்றன.

தமிழியலை மேற்கத்தைய ஆய்வாளார்களின் பிரதான ஆளுமைக்குள் இருந்து மீட்டெடுத்து தமிழர்களின் ஆளுமைக்குள் உட்படுத்தியதில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளும், தனிநாயகம் அடிகள் ஆரம்பித்த Tamil Culture ஆராய்ச்சி ஏடும் முக்கியப் பங்கு வகித்தன.


பொருளடக்கம்
1 தமிழியல் மையங்கள்2 பண்டைய தமிழியல்
2.1 பெர்கிளி பல்கலைக்கழக தமிழியல் பிரிவு2.2 கோலோன் பல்கலைக்கழக தமிழியல் துறை2.3 ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழியல் பிரிவு2.4 சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறை3 இவற்றையும் பார்க்க4 மேற்கோள்கள்5 வெளி இணைப்புகள்
தமிழியல் மையங்கள்[தொகு]பண்டைய தமிழியல்[தொகு]முதன்மைக் கட்டுரை: தொல்காப்பியம் கண்ட தமிழியல்
முதன்மைக் கட்டுரை: நன்னூல் கண்ட தமிழியல்
பெர்கிளி பல்கலைக்கழக தமிழியல் பிரிவு[தொகு]அமெரிக்க பெர்கிளி பல்கலைக்கழகத்தில் தமிழியல் பிரிவு 1995 ஆம் ஆண்டளவில் தொடங்கப்பட்டது. தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெற உதவிய தமிழ் அறிஞர்களில் ஒருவரான ஜார்ஜ் எல் ஹார்ட் இத் துறையின் தலைமைப் பேராசிரியாராக இருக்கிறார். 2005 ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக மூன்று தமிழியல் மாநாடுகள் இங்கு நடைபெற்றன. 2008 க்கான மாநாடு ஏப்ரல் 25-7, 2008 காலப்பகுதியில் இங்கு இடம்பெற இருக்கின்றது.[2]

கோலோன் பல்கலைக்கழக தமிழியல் துறை[தொகு]ஜெர்மன் கோலோன் பல்கலைக்கழக தமிழியல் துறை 1960 களில் இருந்து சிறப்பாக செயற்பட்டு வந்து, 2004 ஆண்டளவில் மூடப்பட இருந்து, 2008 மீண்டும் வீச்சுடன் செயற்படுகின்றது. கோலம் என்ற தமிழியல் கல்வி ஏடு தமிழ், ஆங்கிலம், ஜெர்மன் மொழி என மூன்று மொழிகளிலும் இத்துறையால் முன்னர் வெளியிடப்பட்டது. [3]

ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழியல் பிரிவு[தொகு]கனடா ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழியல் பிரிவு 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2006, 2007 ஆண்டுகளில் தமிழியல் மாநாடுகள் இவர்களால் ஒழுங்கமைப்பட்டது. 2008 க்கான மாநாடு மே 15-17 காலப்பகுதியில் இங்கு இடம்பெற இருக்கின்றது. [4]

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறை[தொகு]சிங்கப்பூரில் தமிழ் ஒரு அரசு அலுவல் மொழியாகும். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றது. [5] இந்தப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை கல்வி, கலை, சமூக சேவை என குழு ஒற்றுமைச் செயற்பாட்டு திறன் வாய்த ஒரு அமைப்பு ஆகும்.

இவற்றையும் பார்க்க[தொகு]யாழ் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 11 பேர் கொலை
மூன்றாவது மொழிப் போர்
மேற்கோள்கள்[தொகு]1.↑ First published as "Defining a New Cosmopolitanism: Towards a Dialogue of Asian Civilisations", in Kuan-Hsing Chen, ed., Trajectories: Inter-Asia Cultural Studies (London: Routledge, 1998), pp. 142-9.[1]
வெளி இணைப்புகள்[தொகு]First International Conference Seminar of Tamil Studies
Research in Tamil Studies - Retrospect and Prospect
தமிழியல் ஆராய்ச்சி - தொகுதி 12 - நூல் விபரம்

எழுதியவர் : (18-Aug-17, 1:30 pm)
பார்வை : 194

மேலே