உன் விழிகள்

உன் விழிகள்
=================================ருத்ரா

உன் விழிகள் தன் பார்வையால்
என் மீது சோழிகள் வீசுகின்றன.
பாம்பா ? ஏணியா?
இந்த இதய அரங்கத்தில்
பரமபதக்கட்டங்கள்.
சிகரம் ஏற்றி
பள்ளத்தாக்கில் ! எறிகிறாய்!
ரோஜாக்களின் ஏரியில் மிதக்கிறேன்...
நம் மனங்கள் கொண்டு செய்த
படகுவீட்டில்
நீரின் பளிங்குத்துடிப்புகளோடு.

===============================

எழுதியவர் : ருத்ரா (18-Aug-17, 3:56 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : un vizhikal
பார்வை : 115

மேலே