என் முத்தங்கள்

என் மடியில் நீ
உன் பிடியில் நான்,
உனக்கும் எனக்கும் ஒரு போட்டி,
ஒரு தவறும் இல்லாமல்,
நட்சத்திரங்களை எண்ணுவதென்று,
தவறாக எண்ணிவிட்டால்
தண்டனையாக ஒரு முத்தம்,
நீ எண்ண துவங்கியது முதல்,
இப்போது வரை,
விண்மீனை விஞ்சியது
என் முத்தங்கள்....

எழுதியவர் : சுரேஷ் காந்தி (18-Aug-17, 8:37 pm)
Tanglish : en muthangal
பார்வை : 284

மேலே