அன்பே

என்னவன்...
எனக்கானவன்...

கதவின்
இடைவெளியில்
எட்டி
பார்க்கும்

கன்னி
இவள்
மனமோ

என்றோ
அவன்
காலடியில்
வீழ்ந்ததே...

ஏகாந்த
சிரிப்பில்
என்
இதயம்
வாங்கி
போனவனல்லவா
அவன்...

கனவுகள்
எல்லாம்
கைகூடிவர
இதோ
என்னவன்
என்
வீட்டில்...

ஏதேதோ
பேசிக்கொண்டிருக்கிறான்
எல்லோரிடமும்..

இருப்பினும்
நான்
அறிவேன்..

அவன்
கண்ணிலே
எனக்கான
தேடல்
உண்டு...

என்
முகம்
பார்க்க
விழையும்
ஆவல்
உண்டு...

எத்துணை
முறை
கேட்டாலும்
சலிக்காத
பாடல்
நான்
அவனுக்கு..

தனிமையில்
நானும்
அவனும்

கதைகள்
பேச
தோன்றா
வேளைகளில்
அவன்
கண்ணோடு
என்
கண்களை
கலக்க
விட்டு
கேட்டிருக்கிறேன்..

என்னை
பிடிக்கிறதா
என்று

நான்
அறிவேன்

அவ்வேளைகளில்
அவன்
கண்ணிலே
தோன்றிமறையும்
மின்னலை

இருப்பினும்
சீண்டிடும்
எண்ணங்கள்
சிறகடிக்க
இல்லை
என்பான்
அவன்

அவனை
அறியா
பெண்ணல்லவே
நான்

இருப்பினும்
கலங்கும்
விழிகளை
கட்டுப்படுத்த
நான்
என்றுமே
முயன்றது
இல்லை

அவ்வேளையில்
அவன்
முகத்திலே
தோன்றும்
அம்மாற்றம்

பேதை
இவள்
காத்திருப்பு
இதை
காணத்தானே

இருப்பினும்
விசும்பல்
நிற்பதற்கு
இல்லை

நான்
நிறுத்துவதாகவும்
இல்லை

அறியா
கணத்திலே
என்னை
அணைத்து
சொல்வான்
அவன்

அடி
பைத்தியமே
உன்மேல்தானடி
எனக்கு
பைத்தியம்
என்று...

ஏதோ
ஜென்மங்கள்
தேவை
தீர்ந்து
போனதாக
தோன்றும்
அவ்வேளையில்

என்
கனவுகளில்
நான்
கண்ட
காதலன்
அல்ல
அவன்

என்
கனவின்
காதலன்
என்னை
என்றும்
கலங்க
வைத்தது இல்லை

நிஜமான
அவன்
வித்தியாசம்

விவரிக்க
இயலா
அவஸ்தை

அழுகையிலும்
ஆனந்தம்
கொள்ளவைக்கும்
சாத்தான்

கடிந்து
நான்
விலகி
போகையில்
ஏனோ
அவன்
விளையாட்டெல்லாம்
என்னிடம்
தோற்றுப்போகும்

அவன்..

என்னை
சீண்டி
விளையாடும்
அவன்...

காணாமல்
போவான்

காணமுயன்று
நான்
தோற்று
போவேன்

என்
கோபமும்தான்..

இருமனம்
இணைத்த
பந்தம்
திருமணமாக
மாறிட

இதோ
என்னவன்
என்
அருகில்

இனி
அவன்
என்னை
பிடிக்கவில்லை
என்று
சொன்னால்
நான்
அழ
போவதில்லை

ஏனெனில்
வார்த்தைகள்
எல்லாம்
தோற்றுப்போக
கண்களால்
அவன்
உணர்த்திய
காதல்
என்றும்
எனைவிட்டு
விலக
போவதுஇல்லை

கூடத்தில்
பேசிக்கொண்டிருக்கும்
அவன்
திடீரென
திரும்பி
பார்க்கிறான்
என்னை

வேகமாக
கதவின்
பின்னே
ஒளிந்து
கொள்கிறேன்
நான்...

எழுதியவர் : (19-Aug-17, 7:12 pm)
சேர்த்தது : கங்காதேவி
பார்வை : 215

மேலே