அவளே நான்
![](https://eluthu.com/images/loading.gif)
உனக்கு பிடித்தமான பக்கங்களின்
வெறுமையில் என் எழுத்துக்கள்
எப்போதும் உயிர்பெற்றுக் கொண்டே
இருக்கும் பினிக்சாய்.
உன் விழியை தாழிட்டு கொள்ளாதே
உன் மேலிமையும் கீழ்யிமையும்
தொடுதலின் உச்சத்தில் காதலாய்
மலரும் அத்திப்பூ.
நீ எப்போதெல்லாம் மலர்கின்றயோ
நான் அப்போதெல்லாம் உயர சென்று ஓளி பிழம்பாய் மாறி போனேன் ஞாயிறாய்.
கார்த்திகை தீபம் எதற்கு உந்தன்
வாசலில் நீ அமர்ந்த கொண்டாள்
தீபங்கலெல்லாம் ஓளியிழந்திடும்
மறைமதி நிலவாய்.
புள்ளி இட்டு கோலமிட்டாய் இருவிழி
புள்ளிகள் இட்டு இதயகமலம் என்னில் இணைத்து விட்டாய் நீளும் கண்கள்
சீனப் பெருஞ்சுவராய்.
தொலைதூர கானல்நீர் அல்ல நான்
உன் வாய் உச்சரிக்கும் உரைநடை
கவிதை நான், உன் பின்னே வரும்
நிழலற்ற நெடுந்துயரம் நான்.
காதலை ஏற்றுக் கொண்டால் உன்
கவிதையின் வரியில் நானிருப்பேன்
பிழையாகி போனால் என் மூச்சு காற்று உன்னோடு ..............
மீதமிருக்கும்