சொர்க்கமும் நீ சோகமும் நீ சுமையும் நீ சுகமும் நீ

கை கோர்த்து கொண்டிருந்த நிமிடங்கள் முழுதும்
காற்றாலை மின்சாரம் முழுதுமே பாய்ந்த
உணர்வு எனக்குள் !

கைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தாய்
அத்தனை இன்பம் எனக்கு !
என் தோள்களையும் பற்றிக்கொண்டிருக்க
ஆசைதான் உனக்கு !
இடம் பொருள் ஏவல் பற்றிய கவலைதான் உனக்கு !

ஆனாலும் உன் இதயமும் என் இதயமும்
பற்றிக்கொண்டதோ !
இருவர் விழிகளும் பேசிக்கொண்டதோ !
இதழ்கள் ஒன்றை ஒன்று பற்ற ஆசைகொண்டதோ !
இதுதான் காதல் என்பதோ !


எத்தனை மென்மையடி உன் விரல்கள் !
இலவம் பஞ்சையும் மிஞ்சுதடி !
என் விரல்கள் உன் கை தவழும் வேளையில்
இன்னும் கொஞ்சநேரம் வேண்டும் என
இதயமும் உன்னிடம் கெஞ்சுதடி !

உன் உதடுகள் என்னிடம் கேட்டது !
அள்ளிக்கொடுக்க ஆசைதான் !
எனக்குள் அச்சம் வந்து தவிர்த்தது !
உனக்குள் வெட்கம் வந்து தவிர்த்தது !

நீ பரிசாய் தந்தாய் ஒரு சாக்லேட்
இனிபாய்தான் இருந்தது எனக்கு !
உன் இதழ் சுவைவை விட தித்திப்பு இல்லையே
என்று சொன்னவுடன் வெட்கம் வந்ததே உனக்கு !

உன் கயல் விழிகள் பேசுதே என்னிடம் எத்தனை
இன்பம் எனக்கு !
இந்த கடிகார முள் ஏன் இப்படி இத்தனை வேகமாய்
சுற்றுதே அத்தனை கவலை எனக்கு !

விரல்களை கோர்த்து வீணை நாதம் வாசித்தாய் !
விடியும் வரை இப்படியே இருக்கலாம் என்று தானே
நீ யோசித்தாய் !
எதற்காக என்மேலான காதலை உனக்குள்
இத்தனை நாளாய் ஒளித்தே வைத்தாய் !
என்னை நீயே முழுதும் உனக்குள் சிறைப்படுத்தி
வைத்தாய் !

நேரமாயிற்று கிளம்பு என்று சொன்னால்
கோவம் கொள்கிறாய் !
இன்னும் கொஞ்ச (ம் ) நேரம் இரு என்று சொன்னால்
அச்சம் கொள்கிறாய் !
நிச்சயமாய் நீதான் என்னை இப்போது கொல்கிறாய் !
இதோ இப்போது நாணம் கொள்கிறாய் !


சொர்க்கமும் நீ !
சோகமும் நீ
சுமையும் நீ !
சுகமும் நீ !
சுவையும் நீ
எல்லாமும் நீ எனக்கு .....!

இறுதிவரை காத்திருப்பேன் நான் உனக்கு !

எழுதியவர் : முபா (20-Aug-17, 9:13 am)
பார்வை : 290

மேலே