திடுக்கு திடுக்கு

ஏண்டா பங்காளி பரமசிவா, உனக்குத்தான் மூணெழுத்துப் பேர உம் பையனுக்கு வைக்கத் தெரியுமா?
😊😊😊😊😊
என்ன பேரெண்ணே அந்தப் பேரு?
😊😊😊😊
'திலக்' காம், 'திலக்'கு. நான் வைக்கறம் பாருடா தெனம் செய்தித் தாள்ல வர்ற ஒரு சொல். அதுதாண்டா எம் பையன் பேரு.
😊😊😊😊
என்னடா பங்காளி கூச்சல் போட்டுட்டு இருக்கற?
☺☺☺☺☺
இல்ல உனக்கு மட்டுந்தான் சுருக்கமான மூணெழுத்துப் பேர வைக்கத் தெரியுமா?
😊😊😊😊
சரி. நீயும் உம் பையனுக்கு ஒரு மூணெழுத்துப் பேர வையுடா பாக்கலாம்.
😊😊😊😊
வைக்கிறண்டா இப்பவே. எம் பையன் பேரு தான் தினமும் 'தினமலர்'
நாளிதழில் பயன்படுத்தற சொல்லுடா.
😊😊😊😊😊
அத சொல்லுடா ஏட்டிக்குப் போட்டி எட்டப்பா, பங்காளி.
😊😊😊😊😊
எம் பையன் பேரு 'திடுக்' . தினமும் தினமலர்ல 'திடுக் தகவல்' -ங்கற தலைப்பில வர்ற செய்தியை லட்சக்கணக்கான மக்கள் வாசிக்கிறபோது எம் பையன் பேர அவுங்க மனசு உச்சரிக்கும்டா. உம் பையன் பேரு அரிதா நாளிதழ்ல வர்ற வாய்ப்பு இருக்குது. போடா போ.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. திரைத் தமிழைத் தவிர்ப்போம்.