உணர்வே உயிர்

பிரபா
எழுந்திருடி காப்பி குடிக்கலாம்.

எழுந்திரு பிரபா
தூங்கனது போதும்.
எழுந்திருடி.
பிரபா இப்ப எழுந்திருக்க போறயா இல்லையா.
அஞ்சு என்றதுக்குள்ள எழுந்திருக்கல அப்புறம் உங்கூட நான் பேசமாட்டன் பாத்துக்கோ.

சொல்லிட்டே இருக்கறன் எழுந்துருக்க மாட்ற.
உனக்கெல்லாம் தண்ணீ தான் சரிபட்டு வரும்.
இதோ இரு வரேன்.
ம் தண்ணீ ஊத்தியும் தூங்கற
உன்ன.

தூக்கி மடியில் வைத்து
ஊ என்று காதில் கத்த
எந்த வித சலனமும் இன்றி உறங்குகிறாள்.

பிரபா
பிரபா என்னாச்சு
எழுந்திருடி

என்னங்க

அப்பாடா .எழுந்துட்டியா
என்னடி .உடம்புக்கு எதுனா செய்தா.
வைத்தியர் கிட்ட போகலாம் வா.

என்னங்க.
அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க.
"உங்க கூட எப்பயும் உடன் இருப்பேனு சொல்லிட்டு.உங்கள தனியா தவிக்கவிட்டு போறனே மாமா .என்ன மன்னிச்சிடுங்க "

என்னடி உளற்ற
உனக்கு ஒன்னுமில்ல.
உன்ன சாகவிடமாட்டேன்டி

" என்னங்க
நான் அன்னைக்கே செத்துட்டன்.
இது வெறும் உடம்பு.
நீங்க என்ன சரியா தெரிஞ்சி வச்சிருக்கிங்க. எனக்கு அதுவே போதும்"

பிரபா
என்னடி பண்ணுது.

"அதோ மேல போய்க் கொண்டிருக்கிறேன் .
அங்கே பாரு மாமா"

"பிரபா நீ
இங்க இருக்கடி என் நெஞ்சுல"

மாமா
என்ற வார்த்தையோடு
என் மார்பில் ஓய்ந்து கண்ணூஞ்சலாடுகிறாள்
மாரடைப்பில்.

என் மார்பில் அவள் உயிரை தந்துவிட்டாள்.
மடியில் உடலை
கிடத்தி விட்டு.

"பிரபா ஏனடி இவ்வளவு அவசரம் .
எனக்காகவே பிறந்தவளடி நீ ...
என்னோடு ஏழேழு பிறவியும் வாழ்பவளடி.
உன்னை நான் அறிவேனடி.
உன்னையும் என்னையும்
யாராலும் எதனாலும் பிரிக்க முடியாதடி.

"என் நண்பன்
நண்பன் என்று சொல்ல இயலா வண்ணம்
துரோகியாகி, நட்பிற்கே கலங்கமாகி விட்டான்.
என் மீது இருந்த கோபத்தில்
என்னை பழிவாங்குவதாய்
உன்னை அவ்வாறு
செய்து விட்டானே .
நான் அதை ஒரு கெட்ட கனவாய் மறந்துவிடு என்றேனே பிரபா .

நான் உனக்கானவள் மாமா.
என்னை அணைத்துக் கொன்று விட்டான் மாமா.
நான் அந்த நொடியே
செத்துட்டன் மாமா.
இதுவெறும் பிணம்.

எல்லோர் முன்னிலையில்
உன்னை கட்டி வைத்து கொடுமை செய்து
உன்னை அசிங்கப்படுத்த
நீ பார்க்க எல்லோர் முன்னிலையிலும்
என்னை அணைத்து முத்தமிட்டு என் மனைவி என்றான்
அல்லவா.

நீயன்றி வேறொருவன்
என்னை அணைக்கும்
பொழுதே நான் செத்துட்டேன் மாமா.
என் காதில் எதுவும் விழவில்லை.

அங்கே அவனை செருப்பை கழட்டி அடித்து,
கையில் இருந்த ஆப்பிள் வெட்டும்
கத்தியால் குத்த
அதை பிடுங்கி
அவன்
என்னவளை குத்தி சாய்த்தான்.
அவளை
எப்படியோ எமனிடமிருந்து
போராடி கொண்டு வந்தேன்.
இன்று தானடி சுயநினைவுக்கு வந்தாய்.
இப்படி என்னை
மொத்தமாய் அழவைக்க சென்றுவிட்டாயோடி...
திரும்ப வந்துடு பிரபா...
நீ இல்லாமல் எனக்கு ஏது வாழ்க்கை...
நீ இல்லாமல் என்னால
வாழ முடியாதுடி...
மீண்டும் வா பிரபா...
கண்ண திற பிரபா...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (22-Aug-17, 10:31 pm)
Tanglish : unarvey uyir
பார்வை : 470

மேலே