என்கவுண்டர்
”டேய் இராமு, அவசரமா என்கவுண்டர்க்கு போகணும்டா” சீக்கிரமா வெளியே வா” சத்தம் போட்டான்.
”டெய்லிதான் போறே, இன்னா அவசரம்” என்றான் சோமு.
இன்னைக்கு என்கவுண்டர்ல கச்சிதமா முடிச்சுட்டு வந்துடுவேன்டா. என்றான்
அதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த சகாதேவனுக்கு அடிவயிறு கலங்கிற்று. சகாதேவன் யாருன்னு சொல்ல்லியே, அவன்தான் ரொம்ப நாளா போலிஸாரால் தேடிக் கொண்டிருக்கும் கொடுர குற்றவாளி.
சகாதேவன் தனது மனைவியையும், குழந்தையையும் நினைத்துக் கொண்டான். நாமளே சரணடைந்தா குற்றத்திற்கான தண்டனையும் குறைச்சி உயிர் பிழைக்கலாம், இப்படி எத்தனை நாளைக்கு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகிட்டு…பயந்து சாகறது. பயமே நம்மளைக் கொண்ணுடும், ஆதனால… ஒரு முடிவு எடுத்தாகணும்-ன்னு தீர்மானித்தான்.
நேராக போலிஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான்.
இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து, ஐயா, என்னைய என்கவுண்டர் பண்ணிடாதீங்க, நானே சரணடைகிறேன்” என்றான்.
அவனை லாக்கப்பில் போட்டு விட்டு வெளியே கிளம்பும் போது… ”டேய் வேலை முடிஞ்சுதாடா சோமு கேட்க… ”டேய் இன்னைக்கு என்- கவுண்டர்ல கூட்டமே இல்லேடா ரொம்பவும் போர் அடிச்சி போச்சு, வழக்கமா ஒரு பொண்ணு வரும், அது கூட வரலேடா” புலம்பிய குரல் கேட்டு…” சதாசிவம் சரணடைந்த்து இவர்களின் பேச்சை எங்கேயோ ஒட்டு கேட்டிருக்கலாம் என தீர்மானித்தான்.
கவிஞர் கே. அசோகன்