விசமப் புன்னகை
நான் எழுதிய கவிதைகளை
ஆவலோடு உன்னிடம்...
சமுதாயக் கவிதைகளை
அலட்சியப் படுத்தி
காதல் கவிதைகளையே
படிப்பாய்...
விசமப் புன்னகையுடன்!
மனதிற்குள் ரசித்தாலும்
மோசமாகத் திட்டுவதே
எனக்கு சுகம்...
தவித்துப் போகும் உன் மனம்
என்னையே
நினைத்துக் கொண்டிருக்கும்
அல்லவா?