மண்வாசக்காதல்

கோழிக்கூவும் வேலையில
நாத்து நட போறவளே
நீ கொண்டபோடும் அழகைக்ககாண கொண்டசேவல்கூட காத்திருக்கும்

கஞ்சியத்தான் தூக்கிக்கிட்டு
காட்டுவழி நீ போனா
கானாங்குருவியெல்லாம்
தன் காதலத்தான் சொல்லுமடி

மொழங்காலு தெரியும்படி
சேலையத்தான் சொருகிக்கிட்டு
நீ நாத்துநடும் அழகினிலே பெண்னே
நட்ட நாத்து எல்லா சொக்கி நிக்கும்

கண்டாங்கி சேலகட்டி
களையேடுக்க நீ போனா
ஓங்கைபுடிக்க ஆசப்பட்டு
களை கைகளைத்தான் நீட்டுமடி

அருவாள சொருகிக்கிட்டு
கருதறுக்க நீ போனா
ஓ இடுப்பத்தொட்ட மெதப்புலதா
அந்த பன்னறுவாளும் பல்லிளிக்கும்

அந்த சங்கு கழுத்துமேல
முத்தப்போல ஊறிவரும் வேர்வைத்துளி
அத பருகிடத்தான் ஆசப்படும்
தென்மேற்க்கு தென்றல் காத்து

களத்துமேட்டில் நீ நடந்தா
வரப்போரம் நாத்தெல்லாம் ஓங்கெண்டக்கால தழுவிடத்தான் வரிசையா ஏங்கி நிக்கும்

கருதுகட்ட தூக்கிக்கிட்டு
நீ இடுப்பாட்டி போகையில
ஆத்தோரம் மரங்களெல்லாம்
தலையாட்டி ரசிக்குமடி

வேகாத வெயிலுக்குள்ள
வேகாலமா வேலசெஞ்சா
கொண்டுபோன கஞ்சியத்தான்
பசியாற குடிப்பதெப்போ

கருதடிக்கும் வேளையில
அந்தி சாயும் மாலையில
நீ நெல்லுத்தூத்தும் அழக்காண
கண்னே நிச்சயமா நா வருவே...

எழுதியவர் : ஆனந் பச்சைதமிழன் (23-Aug-17, 7:42 pm)
பார்வை : 250

மேலே