கோவிலுக்கு போனாலும் வருவேண்டி

நீ போகும் கோவிலுக்குள் உன் வாசம் தேடி வருகிறேன்
உன் கோபம் கண்டு நான் வியந்து போகிறேன்

விழிவறை காதல்
விதி வரை காலம்
வீதி வரை பார்வை
விலகாமல் பூக்குதே

நீ திட்டி தீர்க்கவே நான் நொந்து போகிறேன்
உன் பார்வை பார்க்கவே நான் பதுங்கி வருகிறேன்

விளையாடும் காதல்
விடை இல்லா மோதல்
விழுந்து விட்ட பூக்கள்
விரிக்குதே சிறகை.

எழுதியவர் : விஜய் பாரதி (23-Aug-17, 7:25 pm)
பார்வை : 112

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே