நான் மட்டும் தனியாய்

காற்றில் கை வீசி தேடினேன்
கண் எதிரே பேசி சிரித்த நண்பனை,

எந்த பிரிவும் இப்படி வலித்தது இல்லை,
இது போலே கலங்க வைத்ததில்லை,

உன் உயிரை நீ பிரிந்து,
என்னை ஏன் பிணமாக்கினாய்,

தாய் பாலில் பங்கு வைத்ததில்லை,
தாய் போலே நீ இருந்தாய்,

தந்தை விரலில் பங்கு வைத்தது இல்லை,
தமயன் போலே நீ இருந்தாய்,

என்ன செய்ய என் நண்பா,
நான் மட்டும் தனியாய்..

எழுதியவர் : சுரேஷ் காந்தி (23-Aug-17, 10:20 pm)
பார்வை : 237

மேலே