பிள்ளைப்பிராய தோழி

அரும்பிலே, பிள்ளை வயதிலே
நம் உறவது துளிர்த்ததே........
பால் பேச்சில் பாசம் கிடைத்ததே........
மொட்டுக்கள் போல் உன் புன்னகையில்
எந்தன் நாட்கள் நகர்ந்ததே........
வாழ்க்கையே உன்னிடம் துவங்குதே........
தவழ்ந்த நான் எழுந்து நடக்கையிலேயே
வழித்துணையாய் வந்தவள்........
பள்ளி செல்லும் அந்த பாதையெல்லாம்
அவள் மூச்சால் நிறைத்தவள்........
தென்னைமரம் மடியினிலே அமுது உண்டோம்........
யானைக்குழாய் நீர் குடிக்க போட்டி வைத்தோம்........
ஒரு மைல் தூரமே கொண்ட பாதையிலே
கோடி இன்பங்கள் நாம் காண்கிறோம்........
துன்பம் என்றும் சிறு கவலை என்றும் உள்ள வார்த்தைக்கும் பொருள் அறிந்திடோம்........
குயிலின் கூட்டில் கேட்கும் ஓசையை போல்
என் இதயக் கூட்டில் கேட்கும் உந்தன் பெயர்........
இந்த துடிப்பு நின்று நான் மாண்ட பின்பு
ஆகும் சாம்பலும் காட்டும் உன் அதே பெயர்........