இருவரின் இதயத்துடிப்பும் இருமடங்காய் கூடிப்போனது
![](https://eluthu.com/images/loading.gif)
ஆப்பிள் கன்னங்களில்
அத்தனை முத்தங்கள்
பதித்த பின்பு !
அவ்வளவுதானா ?
என வெட்கி தலை
குனிந்து நீ கேட்ட
அத்தருணத்தில் !
இதமாய் அணைத்து
இதழ்மீது இதழ் பதித்து
தந்த அந்த ஒற்றை முத்தத்தில் !
இருவரின் இதயத்துடிப்பும்
இருமடங்காய் கூடிப்போனது !