சிறைவாசம்

பத்து திங்கள் சிறை வைத்திருந்தாள் எனது அன்பு தாய்...
என்ன ஒரு நிம்மதி அங்கே!
எங்கு தேடியும் நிம்மதியே இல்லை இங்கே!

சில குழந்தைகளுக்கு கருவறை...
சில குழந்தைகளுக்கு பிணவறை...
கலைகிறதா கரு?
கலைக்கப்படுகிறதா கரு?

தாய்பாலை விலைபேசி,
பேரம் பேசி நடக்கிறது வியாபாரம்...
எல்லாம் இந்த உடல் சிறையில் அகப்பட்டதாலே!

வீடுவிட்டு வீடு சென்றால் குல வழக்கமென்ற சிறை...
தெருவிட்டு தெரு சென்றால் சாதியென்ற சிறை...
ஊர்விட்டு ஊர் செல்ல சாதியும், மதமும் பலம் பொருந்திய சிறைகளாய் மாறிட
மாநிலம் விட்டு மாநிலம் செல்ல மொழிவெறியும் சிறையாக,
நாடுவிட்டு நாடு செல்ல இனவெறியென்ற சிறை புகுந்து நிறவெறி சிறையில் அல்லல்படுத்தும் இந்த உலகில் மனிதர்கள் உண்டாக்கிய இச்சிறைகளுக்குள் அகப்பட்டு அவையே சொர்க்கமென்றுபாடும் அறியாமையை விலக்கி தாயின் கருவறையை மீண்டும் இயற்கை தாயிடம் அனுபவிக்க சித்தம் கொள்ளவில்லையோ கைதிகளே?...

எல்லாத்தையும் வாங்கிவிடலாமென்கிறது பணமென்ற சிறை...
அறியாமையில் பூட்டி வைக்கிறது பேராசையென்ற சிறை...
மேலும் மேலும் ஆடம்பரமென்ற சிறை...
இதில் ஆனந்தமென்பதேது ஞானப்பெண்ணே??

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (24-Aug-17, 9:50 pm)
Tanglish : siravaasam
பார்வை : 1145

மேலே