எனக்காய் அவள் மொழி

கண்கள் இல்லா மனிதனர்க்கும் இங்கே கனவு உண்டு.
உன் கண்கள் காண இயலா உயிர்க்கும் கூட உணவு உண்டு.
வானவில் நீயும் காண இடி மின்னல் மழையும் வேண்டும்.
பயிர்கள் உயிராய் வளர நிலத்தைக் கீறிட வேண்டும்.
மலை உச்சி நீயும் காணும் வரையில் கலங்காதே,
கரடு முரடாய் பாதை கடந்தால் காட்சி மாறும்.