தோழியே

ஆயினும் எந்தன் தோழியே
எத்தனை மாற்றங்கள்
வசந்த காலத்தின் நினைவுகள்
நெஞ்சில் தேங்கி கிடைக்கையிலே
உன்னைக் கண்டதும் ஊற்றாய் நினைவுகள் பெருக்கெடுத்ததே
நம்மில் விதைத்த விதைகள்
இன்று செடியாய் மாறியதே
எத்தனை பகிர்தல்கள்
அந்த கணம் மனதில் மறையா
நினைவாய் பதிந்ததே
உன்னை பிரிந்த நேரம்
வாழ்வில் உடைந்த கணம்
நினைவில் தோன்றியதே
எப்பொழுதும் தோன்றும் வெறுமை
அன்றும் தோன்றியதே தோழியே....

எழுதியவர் : பிரகதி (25-Aug-17, 4:29 pm)
Tanglish : thozhiye
பார்வை : 331

மேலே