விடுதியில்

காலத்தில் அழியா ஞாபகங்கள்
எங்கும் கிடைக்காத பந்தங்கள்
பெற்றோரை பிரிந்த துக்கம் நெஞ்சை உருக்கையிலே
கண்ணீர் துடைத்த நட்பு
என்றும் உணராத அன்பு இங்கு உணர்ந்தேனே
இது புது உலகமாய் மாறியதே
துவண்டு விழும் நொடி தோல் தாங்கிய நட்பு கிடைத்ததே
கவலைகள் போக்கி புது புன்னகை மனதில் பூத்ததே
ஒற்றுமை என்னும் பலம் கிடைத்ததே
வெவ்வேறு முகங்கள்
இன்று ஒரே முகமாய் மாறியதே
எத்தனை சேட்டைகள்
மறக்க முடியா தருணங்கள்
எங்கும் கிடைக்காத அனுபவங்கள்
இங்கு கிடைக்கிறதே
விடுதி என்னும் குருவி கூட்டில்.

எழுதியவர் : பிரகதி (26-Aug-17, 10:39 am)
Tanglish : viduthiyil
பார்வை : 127

மேலே