தோழி

என் கண்ணில் நீர்தான் கண்டால் நீ
கைக்குட்டையாய் வருவாய்

நெஞ்சில் பாரம் வந்தால் நீ தாங்கிக் கொள்ள வருவாய்

காதல் தோல்வி நானும் கண்டால் தாயை போல வருவாய்

இரவின் இருளில் தொலைந்தால் விளக்கொளியாய் நீயும் வருவாய்

நான் கத்தி பேசும் போதும் நீ புன்னகை உதிர்ப்பாய் நாளும்

இரத்த சொந்தம் இல்லை எனினும்-உன்
இதயம் துடிக்கும் எனக்காய்

உன் உறவுக்கென்ன பெயர்தான் வைக்க வார்த்தையில்லை

நட்பு என்ற ஒற்றை வார்த்தை மட்டும் போதவில்லை.

எழுதியவர் : சிவக்குமார்-"கரிசல்மகன்" (24-Aug-17, 1:03 pm)
Tanglish : thozhi
பார்வை : 417

மேலே