எனக்கு காதலிக்க தெரியவில்லை

காதலில்
உன்னோடு அதிக நேரம் செலவிட விரும்புவது
இயல்பே என்று எண்ணுகிறேன்!
காதலில்
உன் கரம் பிடிக்குது ஒலி அற்ற மௌனத்தில் நேரம் கரைப்பது
இயல்பே என்று எண்ணுகிறேன்!
காலை தொட்டு இரவு முடிய
விழிக்குள் அமர்ந்து நீ செய்யும் இம்சையையேனும் வேண்டும் என்பது
இயல்பே என்று எண்ணுகிறேன்!
என்னோடு பேசு
இம்சி
சண்டை இடு
அடிகள் பயில்
என்னோடு இரு
என் விரல் இடுக்குகள் உன் கரம் இடைநுழய ஏங்கி கொண்டியிருக்கிறது
என் முகம் என் ஏக்கத்தை வெளி படுத்த தெரியாமல் புன்னகையை மட்டும் உதிர்த்து
ஏங்கி கொண்டிருக்கிறது
என் வார்த்தைகள் என் நாவுக்குள் சுற்றி சுழன்று கொண்டு இருக்கிறது
என் இதயம் படபடப்பின் உச்சத்தை எட்டி கொண்டு இருக்கிறது
நான் உன்னை எண்ணி ஏங்கி சாகும் முன்ன
பெண்ணே
நீயே புரிந்துகொண்டு
என்னுள் வந்து கலந்து விடு!- மெய்யில்
எனக்கு காதலிக்க தெரியவில்லை!

எழுதியவர் : A V அஜித் (25-Aug-17, 4:09 pm)
பார்வை : 1356

மேலே