கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்-காதல் துளிகள்-08

.....கொஞ்சம் காதல்
கொஞ்சம் மோதல்.....

காதல் துளிகள் : 08

36.உன் விரல் கோர்த்து
நான் நடந்திடும் வேளைகளில்
போகும் பாதை நீளாதா
என்ற ஏக்கத்தோடே
உன்னுடனான என்
ஒவ்வொரு பயணங்களும்
முடிந்து விடுகின்றன...

37.என் இரவுகளைக் களவாடும்
உன் கனவுகளை நான்
நேசிப்பதில்லை-என்
உயிர் மூச்சாக அனுதினமும்
சுவாசிக்கிறேன்...

38.உன்னைச் சந்திக்கும்
அத்தனை தருணங்களிலும்
என் விழிகள் உன்னை
படம்பிடித்துக் கொள்கின்றன..
என் இருதயக்கூட்டுக்குள்
என்னவனாய் உன்னை
சேமித்துக் கொள்வதற்காய்...

39.என் மடி சாய்ந்து
மழலையாய் நீ தூங்கும்
அத்தனை பொழுதுகளிலும்
உன்னை ரசிக்கும் கவிஞனாக
என் மனம் உருமாறிக்
கொள்கின்றது...

40.என் உதடுகளில் நீ
விட்டுச் செல்லும் தவறுகளை
நான் திருத்திக் கொள்வதில்லை
அதற்கான அனுமதியைக் கூட
உன் இதழ்கள் தர மறுப்பதால்..

எழுதியவர் : அன்புடன் சகி (25-Aug-17, 10:35 pm)
பார்வை : 252

மேலே