என்னை உணர்ந்தேன்
உன்னை கண்ட பின்னே,நான் என்னை உணர்ந்தேன் பெண்ணே,
உன் நிழலை தீண்டத்தானே மணலாய் மாறிப்போனேன்,
நீ என்னை சுவாசிக்கத்தானே காற்றாய் கரைந்தேன் நானே,
உன் தேகம் தீண்டிச்சென்ற தென்றல்,அது என் சுவாசமாக மாற
தவங்கள் பலவும் செய்தேன்.
அந்த தவத்தின் பலனாய் தானே நான் உயிர் கொண்டேன் பெண்ணே.